பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி 25/10/1976 அன்று மர்ஹூம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் கன்ஜுல் உலூம் அல்லாமா V.U.A. யூசுப் அன்ஸாரி ஹழ்ரத் அவர்களால் துவங்கப்பட்ட நமது கல்லூரி கடந்த 40 ஆண்டுகளாக இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ். ஆரம்பத்தில் 15 மாணவர்களையும் 2 உஸ்தாதுமார்களைக் கொண்டும் துவங்கப்பட்டது. அடுத்த ஆண்டே இது வளர்ச்சியடைந்து பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்ந்து ஏழு ஆலிம்களும் ஒரு ஹாபிழும் பட்டம் பெற்றனர். மர்ஹூம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் கன்ஜுல் உலூம் அல்லாமா V.U.A. யூசுப் அன்ஸாரி ஹழ்ரத் அவர்கள் தனக்கு நெருக்கமான தனவந்தவர்களை அணுகி, கல்லூரியைப் பற்றி எடுத்துக் கூறி ஒவ்வொருவரும் ஒரு கட்டிடம் கட்டிக் கொடுக்க செய்தார்கள்.